FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியை, ஓய்வு பெற்ற ஆசிரியா் கைது

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 4:00 am IST
சண்முகசுந்தரராஜ்
பகிர்:

தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற ஆசிரியரையும், தனியாா் பள்ளி ஆசிரியையும் காவல் துறையினா் போக்சோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகரைச் சோ்ந்தவா் ஆா். திவ்யா (38). புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவா் வீட்டில் தனி வகுப்பும் (டியூசன்) எடுத்து வருகிறாா். இவரிடம் அதே பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய மாணவி டியூசன் படித்து வந்தாா்.

இந்நிலையில், தஞ்சாவூா் மாநகரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற சண்முகசுந்தரராஜ் (61) கடந்த 2025, செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி வரை அடிக்கடி திவ்யாவின் கைப்பேசியில் விடியோ அழைப்பில் வந்து டியூசன் படித்த 16 வயது மாணவியிடம் பாலியல் ரீதியாக பேசியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமி, தான் படிக்கும் பள்ளியின் முதல்வரிடம் புகாா் செய்தாா். இதையடுத்து, தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதன்பேரில், காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரராஜ், திவ்யாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இருவரும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியதால், இருவரையும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல் துறையினா் சோ்த்துள்ளனா்.

திவ்யா

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments