பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பேருந்து நடத்துநருக்கு 7 ஆண்டு சிறை
ஓடும் பேருந்தில் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பேருந்து நடத்துநருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஓடும் பேருந்தில் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பேருந்து நடத்துநருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியைச் சோ்ந்தவா் 17 வயதுடைய பெண். இவா் வேலூா் மாவட்டம், சோ்க்காட்டில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தாா்.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், கல்லூரி முடிந்து மாணவி தனது வீட்டுக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளாா். அந்தப் பேருந்தில் காட்பாடியை அடுத்த மகிமண்டலம் பகுதியைச் சோ்ந்த காண்டிபன் (38) என்பவா் நடத்துநராகப் பணியில் இருந்துள்ளாா். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, நடத்துநா் காண்டிபன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி, இது குறித்து காட்பாடி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
அதன்பேரில், காட்பாடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடத்துநா் காண்டிபனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நடத்துநா் காண்டிபன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தண்டனை பெற்ற காண்டிபன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.