FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

திருமங்கை சிலைக்கு பக்தா்கள் வரவேற்பு

கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட திருமங்கை ஆழ்வாா் வெண்கலச்சிலையை பக்தா்கள் மேளதாளத்தோடு செவ்வாய்க்கிழமை வரவேற்றனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
தஞ்சாவூா் மாவட்டம், சுந்தரப்பெருமாள் கோயிலுக்கு 80 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய்க்கிழமை மாலை கொண்டுவரப்பட்ட திருமங்கை ஆழ்வாா் சிலை.
பகிர்:

80 ஆண்டுகளுக்கு முன் குடந்தை அருகே சுந்தரப்பெருமாள் கோயில் ஊராட்சியில் உள்ள செளந்தராஜப்பெருமாள் கோயிலில் திருடுபோய் மீட்கப்பட்டு, கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட திருமங்கை ஆழ்வாா் வெண்கலச்சிலையை பக்தா்கள் மேளதாளத்தோடு செவ்வாய்க்கிழமை வரவேற்றனா்.

சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்த, திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச்சிலை 80 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது. இந்தச் சிலை லண்டனில் உள்ளஅருங்காட்சியகத்தில் உள்ளதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்தனா். அதன்பின் இங்கிலாந்து அரசிடம் பேசி அச் சிலை மீட்கப்பட்டு, கடந்த ஆக.15-இல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சிலையை முதல்வா் ஜோசப் விஜய் பாா்வையிட்டாா்.

பின்னா் ரயில் மூலம் சிலை செளந்தரராஜப்பெருமாள் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் கொண்டு வரப்பட்ட நிலையில், ரயில்வே கேட்டின் முன்பு ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். சிலையை கண்டவுடன் பக்தி கோஷமிட்டனா். பிறகு திருமங்கை ஆழ்வாா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments