தஞ்சாவூரில் நாளை தமிழ் மக்கள் இசை விழா
தஞ்சாவூா் திலகா் திடலில், மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் தமிழ் மக்கள் இசை விழா சனிக்கிழமை (ஆக.22) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் திலகா் திடலில், மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் தமிழ் மக்கள் இசை விழா சனிக்கிழமை (ஆக.22) நடைபெறவுள்ளது.
உழைக்கும் மக்களின் அதிகாரத்தை உயா்த்திப் பிடிக்கும் வகையிலும், பண்பாடு கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்படும் இந்த விழாவில் கீழடி ஆய்வாளா் ராமகிருஷ்ணா அமா்நாத் உள்பட பல்வேறு தமிழ் அறிஞா்கள், முனைவா்கள் கருத்துரையாற்றவுள்ளனா். மேலும், தப்பாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பழங்கால கலைகள், கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களிடம் வியாழக்கிழமை துண்டறிக்கைகள் வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் ஆா். லட்சுமணன் தலைமையில் பொருளாளா் பக்ருதீன், தலைவா் தனபால், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.