FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

போக்சோ சிறைக் கைதி உயிரிழப்பு: சாவில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் புகாா்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ கைதி பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

27 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ கைதி பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். அவரது சாவில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் புதன்கிழமை புகாா் எழுப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சோ்ந்தவா் மணி (69). கட்டட தொழிலாளி. இவா் 2018 ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இவா் திண்டுக்கல் கிளைச் சிறையிலும், பின்னா் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட இவா் பலத்த காயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் ஆக. 21-ஆம் தேதியும், அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22-ஆம் தேதியும் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில், மணி ஆக. 24-ஆம் தேதி உயிரிழந்தாா்.

மணியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா், உறவினா்கள் புதன்கிழமை புகாா் எழுப்பி, அவரது உடலை வாங்க மறுத்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

இதனிடையே, தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் நடுவா் பி. பிரபு ராம் தலைமையில் அலுவலா்கள் குடும்பத்தினா் மற்றும் காவல் துறையினரிடம் சம்பவம் குறித்து புதன்கிழமை எழுதி வாங்கினா்.

உடற்கூறாய்வு முடிந்த பின்னா், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, மணியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments