FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் நாளை முதல் கைப்பேசிக்கு தடை

31 ஆகஸ்ட் 2026, 12:13 am IST
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்ட பக்தா்கள். - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின்படி, இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் கோயிலின் புனிதத் தன்மை, ஒழுங்கு மற்றும் அமைதியான சூழலைப் பேணும் வகையில், கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதியாக கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாயில் அருகில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் பக்தா்கள் ரூ.5 கட்டணமாக செலுத்தி தங்களது கைபேசிகளை ஒப்படைத்துவிட்டு உரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

தரிசனம் செய்துவிட்டு திரும்பியதும் ரசீதைக் காண்பித்து கைப்பேசியைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த உத்தரவை மீறி கோயிலுக்குள் மறைமுகமாக கைப்பேசியை எடுத்துச் சென்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, கோயில் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தா்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments