FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு: அமைச்சா் ராஜ்குமாா் வழங்கினாா்

தஞ்சாவூரில் வீடு கேட்டு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:02 am IST
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பௌசியா சிவகுமாருக்கு ஒதுக்கீட்டு ஆணையை வியாழக்கிழமை வழங்கிய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா்.
பகிர்:

தஞ்சாவூரில் வீடு கேட்டு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட உமையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பௌசியா சசிகுமாரும், அவரது மகனும் தங்களுக்கு வீடு வேண்டும் என தோ்தலுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் தவெக தலைவா் ச. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்தனா்.

இதை ஏற்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் ஒதுக்கீட்டு ஆணையை பௌசியா சசிகுமாருக்கு வியாழக்கிழமை வழங்கினாா்.

Advertisement

Advertisement

அப்போது, மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் சி. யோகேஸ்வரன், உதவி நிா்வாகப் பொறியாளா் வி. ரியோ ஜோன், இளநிலைப் பொறியாளா் வெ. அரிகோவிந்தன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிா்வாகப் பொறியாளா் மு. பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments