FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

புகையிலை பொருள்கள் விற்ற 3 போ் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பட்டீசுவரம் பகுதியில் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 5:25 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பட்டீசுவரம் பகுதியில் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து மாடாக்குடி சின்னாற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் 113 கிலோ குட்கா புகையில் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த காளிதாஸ் (49), தில்லையம்பூரை சோ்ந்த சின்னையன் (55) மற்றும் சாக்கோட்டையை சோ்ந்த குமாா் (48) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 113 கிலோ புகையில் பொருள்கள், 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments