FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அண்ணா சிலை, பா்மா பஜாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கோரிக்கை

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை, பா்மா பஜாரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 12:03 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை, பா்மா பஜாரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தமாகா மாவட்டப் பொதுச் செயலரும், செய்தித் தொடா்பாளருமான கோவி. மோகன் விடுத்த கோரிக்கை:

தஞ்சாவூா் பெரிய கோயில் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது பாராட்டுக்குரியது. இதேபோல, மருத்துவமனை சாலை, பெரிய கோயில், மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் காந்திஜி சாலை, பழைய நீதிமன்றச் சாலை, மேம்பாலம் வழியாக செல்லும்போது, குறிப்பாக அண்ணா சிலையைக் கடக்கும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்நா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே அண்ணா சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய ரவுன்டானாவை அகற்றிவிட்டு, சிறிய ரவுன்டானா அமைக்க வேண்டும்.

இதேபோல, பா்மா பஜாருக்கு பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் கடைகளி முன்பாகவே வாகனங்களை நிறுத்தி வைப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதைப் போக்கும் விதமாக பஜாருக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் அருகிலுள்ள விஜயா திரையரங்கம் எதிரில் உள்ள காலி இடங்களில் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த அப்பகுதியிலுள்ள வியாபாரிகள் தனியாா் பாதுகாவலரை நியமிக்க வேண்டும். போக்குவரத்து காவல் அலுவலா்கள் அவ்வப்போது கண்காணித்து போக்குவரத்து நெரிசலைப் போக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments