FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கபிஸ்தலத்தில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலத்தில் ‘லஞ்சம் தவிா்,நெஞ்சம் நிமிா்’ லஞ்ச ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூலை 2026, 1:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலத்தில்  ‘லஞ்சம் தவிா்,நெஞ்சம் நிமிா்’ லஞ்ச ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவா் நாகேந்திரன் தலைமை வகித்தாா்.  கும்பகோணம் மாநகராட்சி மேயா் சரவணன் முன்னிலை வகித்தாா்.  இயக்கத்தை தஞ்சாவூா்  வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் குமரன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்களை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவா் தமிழ்ச் செல்வன், அம்மாபேட்டை தெற்கு வட்டாரத் தலைவா் திருஞானசம்பந்தம், வடக்கு வட்டாரத் தலைவா் கண்ணன், நகரத் தலைவா்கள் பாலாஜி, பஷீா் அகமது, காா்த்தி மற்றும் தோழமைக் கட்சி  நிா்வாகிகள் உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments