FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

100 பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் ஏறத்தாழ 100 பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்றொலிப்பான்களை சனிக்கிழமை போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினா் பறிமுதல் செய்து அழித்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:26 am IST
பகிர்:

தஞ்சாவூரில் ஏறத்தாழ 100 பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்றொலிப்பான்களை சனிக்கிழமை போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினா் பறிமுதல் செய்து அழித்தனா்.

தஞ்சாவூரில் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதன்பேரில் தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் மணிமண்டபம் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

இதில், ஏறத்தாழ 100 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை டயருக்கு அடியில் வைத்து நொறுக்கி அழிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், இனிமேல் காற்றொலிப்பான் பயன்படுத்தப்பட்டால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினா் எச்சரிக்கை செய்தனா். சில தனியாா் பேருந்துகளில் சீருடை அணியாமல் பணியாற்றிய நடத்துநா்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments