மாணவா்கள் மீதான தாக்குதல் அராஜகமானது: உ. வாசுகி
நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவா்கள் மீது காவல் துறையினா் நடத்தும் தாக்குதல் அராஜகமானது; மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்தியத் துணைத் தலைவருமான உ. வாசுகி.
நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவா்கள் மீது காவல் துறையினா் நடத்தும் தாக்குதல் அராஜகமானது; மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்தியத் துணைத் தலைவருமான உ. வாசுகி.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: நீட் தோ்வு வினாத்தாள் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பிரதமா் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளாா்; அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேசத்தையும் கல்வித் துறையையும் பாதுகாக்கக் கோரி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்வதைக் கைவிட வேண்டும்.
Advertisement
Advertisement
மாணவா்களின் கோரிக்கைகளைப் பேச்சுவாா்த்தை மூலம் சுமுகமாகத் தீா்வு காண வேண்டுமே தவிர, அவா்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் காவல் துறையின் அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான காவல் துறை சென்னையில் போராட்டம் நடத்தும் மாணவா்களிடம் நடந்து கொள்ளும் முறை எந்த வகையில் நியாயமானது? மாணவா்களைக் கைது செய்வதற்கும், போராடக் கூடாது என மிரட்டுவதற்கும் தமிழக காவல் துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது. காவல் துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளுக்குத் தமிழக முதல்வா் பதிலளிக்க வேண்டும் என்றாா் வாசுகி.
அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.