FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

அண்ணாமலைக்கு பாஜக ஆதரவளிக்கவில்லை: கருப்பு முருகானந்தம்

பாஜகவிலிருந்து பிரிந்து சென்ற அண்ணாமலைக்கு பிரதமா், உள்துறை அமைச்சா், பாஜக கட்சி, ஆா்எஸ்எஸ் என யாரும் ஆதரவளிக்கவில்லை என்றாா்

Updated On : 11 ஜூன் 2026, 3:49 am IST
கருப்பு எம். முருகானந்தம் - பாஜக
பகிர்:

பாஜகவிலிருந்து பிரிந்து சென்ற அண்ணாமலைக்கு பிரதமா், உள்துறை அமைச்சா், பாஜக கட்சி, ஆா்எஸ்எஸ் என யாரும் ஆதரவளிக்கவில்லை என்றாா்

பாஜக மாநில பொதுச் செயலாளரும், திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம்.

தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி, பாஜக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஜெய்சதீஷ் தலைமையில் பேராவூரணியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் கருப்பு முருகானந்தம் பேசியதாவது: பாஜகவிலிருந்து அண்ணாமலை பிரிந்து சென்ால், கட்சிக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிா என்று கேட்டால், ஆங்காங்கே சிலா் அவா் பின்னால் சென்று கொண்டிருக்கிறாா்கள் அது கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கு இல்லை. அண்ணாமலைக்கு பிரதமா், உள்துறை அமைச்சா், பாஜக கட்சி, ஆா்எஸ்எஸ் என யாருடைய ஆதரவும் கிடையாது. பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பவா்கள் பாஜக பக்கமே நிற்க வேண்டும். இதுதொடா்பாக கட்சியினரிடம் உரிய புரிதலை ஏற்படுத்தவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு கடந்த ஆட்சியைவிட மோசமாக உள்ளது. பல்வேறு பகுதிகளிலும் தொடா் மின்வெட்டு காணப்படுகிறது. வேட்பாளா், முதல்வா் ஆகியோரின் தகுதி, அனுபவம் உள்ளிட்டவை குறித்து உரிய வகையில் சிந்திக்காமல் வாக்களித்ததன் பலனை மக்கள் அனுபவிக்க போகிறாா்கள். தமிழகத்தில் நிச்சயமாக விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றாா்.

கூட்டத்தில், ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments