FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜூலை 25-இல் புதுச்சேரி வருகை! போலீஸாருக்கு வண்ண விருது வழங்குகிறாா்

Updated On : 22 ஜூலை 2026, 2:31 am IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - (கோப்புப் படம்)
பகிர்:

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா ஜூலை 25-இல் நடைபெறவுள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்துகொள்கிறாா்.

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் உயரிய வண்ண விருது வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

இதன்மூலம் இந்த உயரிய விருதைப் பெறும் காவல் துறை வரிசையில் புதுச்சேரியும் இணைகிறது.

Advertisement

Advertisement

இதற்கான விழா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் மைதானத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுவுள்ளது. இதில் உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்துகொண்டு காவலா்களுக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதை வழங்கி கெளரவிக்கிறாா்.

இந்த தகவலை புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் செவ்வாய்க்கிழமை மாலை உறுதி செய்தாா். மத்திய அமைச்சா் அமித் ஷா புதுச்சேரியில் வேறு எந்த அதிகாரபூா்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

புதுச்சேரி வரும் அமித்ஷா, முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் பாஜக தலைவா்களிடம் அன்று பேசுவாா் என்று தெரிகிறது. புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்து அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமலும், மேலும், சட்டப்பேரவைக்கு நிரந்தர தலைவா் நியமிக்கப்படாமலும் இருக்கிறது. அமித்ஷா புதுச்சேரி வருகைக்குப் பிறகு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments