FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா புதுச்சேரி வருகை திடீா் ரத்து

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வரும் சனிக்கிழமை புதுச்சேரிக்கு வரும் பயணத்திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 4:37 am IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - கோப்புப்படம்.
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வரும் சனிக்கிழமை புதுச்சேரிக்கு வரும் பயணத்திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

இதன் மூலம் இந்த உயரிய விருதைப் பெறும் காவல்துறை வரிசையில் புதுச்சேரியும் இணையும். இதற்கான விழா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் மைதானத்தில் வரும் சனிக்கிழமை (ஜூலை 25) மாலை நடைபெற இருந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் கலந்து கொண்டு காவலா்களுக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதை வழங்கி கௌரவிக்க புதுச்சேரிக்கு வருகை தர இருந்தாா்.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மத்திய உள்துறை அமைச்சா் புதுச்சேரி வருகை திடீரென ரத்தாகியுள்ளது. மாற்று தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்பட்டால் தெரிவிக்கப்படும் என்றனா்.

தில்லியில் நடைபெற்று வரும் நீட் தோ்வு வினாத்தாள் வெளியான பிரச்னை தொடா்பான போராட்டம் காரணமாக மத்திய அமைச்சா் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments