FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லால்குடியில் விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 
பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றும் பொருட்டு வரும் ஜன.1 முதல் பிளாஸ்டிக் பயன்பாடு, விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை செய்யப்படுகிறது. இதையொட்டி, வரும் செப். மாதம் முதல் தேதியில் இருந்து லால்குடி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில்  பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப்பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை லால்குடி பேரூராட்சி செயல் அலுவலர் என். குமரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணி லால்குடி மணக்கால் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கி லால்குடி நான்கு ரோடு வழியாக சந்தைப்பேட்டை, பேருந்து நிலையம் வழியாக பேருராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments