மணப்பாறையில் கலைஞர் பிறந்த நாள்: மகப்பேறு மகளிருக்கு பரிசு பெட்டகம்
மணப்பாறையில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திமுகவினர் கொண்டாடினர்.
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள 70 மகப்பேறு மகளிர்களுக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான பொருள்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கி மகிழ்ந்தனர்.
மணப்பாறையில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொண்டாடிய திமுகவினர், அங்குள்ள சிகிச்சையில் இருந்த 70 மகப்பேறு மகளிர்களுக்கு வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால் சார்பில் தலா ரூ.200 மதிப்பிலான பச்சிளம் குழந்தைகளுக்கான 9 பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, நகர்மன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டோ, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் மலைதுரை, திமுக மாவட்ட பொருளாளர் என்.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் சி.ராமசாமி, நகர நிர்வாகிகள் மு.ம.செல்வம், பால்பாண்டி, இலியாஸ், விஜயபாஸ்கரன், ஜாஹீர் ஹுசைன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.