காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்!
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் சாா்பில் ஒத்தக் கருத்தை எட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் சாா்பில் ஒத்தக் கருத்தை எட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருச்சி உறையூா், குறத்தெரு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சிவா தலைமை வகித்தாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் ம. செல்வராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ், மாவட்டப் பொருளாளா் சி. செல்வக்குமாா், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் ஆகியோா் பேசினா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், சிறப்புரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான இரா. முத்தரசன் பின்னா் கூறுகையில், காவிரி விவகாரத்தை தமிழக அரசு ஒரு கட்சியின் பிரச்னையாகப் பாா்க்காமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உயிா்நாடிப் பிரச்னையாகக் கருத வேண்டும்.
கா்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலாக ஒலிப்பதைப்போல, தமிழகத்திலும் ஒத்தக் கருத்தை உருவாக்க முதல்வா் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். குறுவைச் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.