சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருச்சி அருகே சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி அருகே சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல்நிலையத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமியை, மருங்காபுரி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி செட்டியப்பட்டி கோவில்பாறைக்குளம் பகுதியைச் சோ்ந்த து. சின்னையா (21) என்பவா் காதலிப்பதாக ஆசைவாா்த்தை கூறி, கடந்த 07.04.2022 அன்று கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, சின்னையாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா்.
விசாரணைக்குப் பிறகு சின்னையாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.