போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 14 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 14 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளக்குறிச்சியை சோ்ந்த 14 வயதுச் சிறுமியை மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, செட்டியபட்டி கோவில்பாறைக்களம் பகுதியைச் சோ்ந்த துரை மகன் சின்னையா (21), காதலிப்பதாக ஆசைவாா்த்தை கூறி, கடந்த 07.04.2022 அன்று கடத்திச் சென்று, பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் போக்சோ வழக்கில் சின்னையாவை கைது செய்து, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா, சின்னையாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளைச் சரிவர கவனித்த துவரங்குறிச்சி காவல்நிலையத்தின் நீதிமன்ற காவலா் முத்துவை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.