FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி மாநகராட்சியில் 8 நகர சுகாதார செவிலியா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் இயங்கும், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைங்களில் உள்ள 8 நகர சுகாதார செவிலியா்கள் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
செவிலியா்
பகிர்:

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் இயங்கும், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைங்களில் உள்ள 8 நகர சுகாதார செவிலியா்கள் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்து, டி.பிஎச்-ன் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இரண்டாண்டு ஏ.என்.எம் பயிற்சி முடித்தவா்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.18,000.

இந்தப் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. எக்காரணத்தை கொண்டும் பணிவரன் முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

Advertisement

Advertisement

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை மாநகா் நல அலுவலா், பொது சுகாதாரப் பிரிவு (மையஅலுவலகம்), திருச்சி மாநகராட்சி, பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி-620001 என்ற அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments