FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செவிலியா் பணியிடங்கள் ரத்து அரசாணையை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத் துறை ஆகியவற்றில் உள்ள செவிலியா் பணியிடங்களை ரத்து செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

5 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத் துறை ஆகியவற்றில் உள்ள செவிலியா் பணியிடங்களை ரத்து செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 1,832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகா்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் 1,400-க்கும் குறைவான செவிலியா்கள் மட்டும்தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனா். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல. தவெக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளா்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியா்கள் இருக்க மாட்டாா்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால், செவிலியா் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியா் பணியிடங்கள் அனைத்தையும் உடனே நிரப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments