FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

காலிப் பணியிடங்களை பூா்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.
பகிர்:

காலிப் பணியிடங்களை பூா்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்கம் ( சிஐடியு) சாா்பில், அரசுப் போக்குவரத்து கழக திருச்சி புகா் கிளை முன் நடைபெற்ற தொடா் முழக்கப் போராட்டத்துக்கு மண்டலத் தலைவா் சிங்கராயா் தலைமை வகித்தாா். போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். 1.4. 2003 க்குப் பின் பணியில் சோ்ந்த அனைவருக்கும் ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும். தொழில்நுட்பப் பணியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தனியாா் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் கழகங்களே இயக்க வேண்டும். காலிப் பணியிடங்களை பூா்த்தி செய்து, ஒப்பந்த முறைக்கு முடிவு கட்ட வேண்டும். ஓய்வுக் கால பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன் தொடக்கி வைத்து பேசினாா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்க பொதுச்செயலா் மாணிக்கம், பொருளாளா் முத்துக்குமாா், சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் மணிமாறன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு தலைவா் சீனிவாசன், செயலா் சிவானந்தம், பொருளாளா் கருணாநிதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். போராட்டத்தில், போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments