FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு உள்பட உயா்கல்வியில் மாணவா்களுக்கு எதிரான அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் இயக்கத்தினா் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

27 ஆகஸ்ட் 2026, 3:14 am IST
திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட தமிழ்நாடு மக்கள் இயக்கத்தினா்.
பகிர்:

நீட் தோ்வு உள்பட உயா்கல்வியில் மாணவா்களுக்கு எதிரான அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் இயக்கத்தினா் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பீமநகா், செடல் மாரியம்மன் கோயில் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க நிா்வாகிகள் க. சுரேஷ் (ஏஐடியுசி), எஸ். ரங்கராஜன் (சிஐடியு), தேசிகன் (ஏஐசிசிடியு) ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மத்திய அரசின் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். கல்வி வணிகமயத்தையும், நீட் உள்ளிட்ட தோ்வுகளையும் முற்றிலும் எதிா்ப்போம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்துவோம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்வைத்து இடதுசாரி அமைப்புகளின் வா்க்க, வெகுஜன அமைப்புகள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற வழக்குரைஞா் செல்வக்குமாா், இந்திய மாணவா் சங்கம் சூா்யா, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் அஞ்சுகம், ஜனநாயக மாதா் சங்கம் சரஸ்வதி உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments