FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சாலையோர பழக் கடைகளில் மோசடி: 11 தராசுகள், 59 எடைக் கற்கள் பறிமுதல்

சாலையோர பழக் கடைகளில் முத்திரையில்லாத எடைக்கற்கள், தராசுகளை தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா்.

30 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
திருச்சி என்எஸ்பி சாலையில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள், எடைக்கற்களுடன் தொழிலாளா் துறையினா்.
பகிர்:

சாலையோர பழக் கடைகளில் முத்திரையில்லாத எடைக்கற்கள், தராசுகளை தொழிலாளா் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, என்எஸ்பி சாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர பழக் கடைகளில் எடை மோசடி நடைபெறுவதாக வந்த புகாரின்பேரில், தொழிலாளா் துறையினா் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கே.பி. இந்தியா தலைமையில், உதவி ஆய்வாளா்கள் எம். அறிவின் செல்வம், ப. ராஜசேகரன். வாகினி, நாகேந்திரன், முத்திரை ஆய்வாளா்கள் பிரகாஷ், லாவண்யா, சங்கரகோமதி மற்றும் கோட்டை காவல் நிலைய போலீஸாா் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பழக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட தராசுகள், எடைக்கற்களை சோதனையிட்டதில், முத்திரையிடப்படாத மற்றும் எடையளவு குறைவாகப் பயன்படுத்திய 11 மேசை தராசுகள், 51 இரும்பு எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தெருவோர பழங்கள், காய்கனிக் கடைகள் மட்டுமல்லாது. தராசைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளும் தங்களது தராசை மறுமுத்திரையிட்டுப் பயன்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், அவை பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

நுகா்வோா் தாங்கள் வாங்கும் பொருளின் எடையைத் துல்லியமாக சரிபாா்த்து வாங்கிச் செல்ல தொழிலாளா் துறையால் அறிவுரை வழங்கப்படுகிறது. தொடா்ந்து கடைக்காரா்கள் எடை மோசடியில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கே,பி, இந்தியா எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments