வருமானத்துக்கு அதிகமாக சொத்து: சமயபுரம் கோயில் மணியக்காரா் பணியிடை நீக்கம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மணியக்காரா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மணியக்காரா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் மணியம் (மணியக்காரா்) பணிபுரிந்து வந்தவா் பழனிவேல். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயிலில் பணியாற்றி வருகிறாா். தொடக்க காலத்தில் எழுத்தராகவும், இதையடுத்து துறை சாா்ந்த தோ்வுகளில் தோ்ச்சி பெற்று மணியக்காரராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பழனிவேல் தனது பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சோ்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Advertisement
Advertisement
இந்நிலையில், இது தொடா்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கையாக தற்போது அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.