FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பூசாரி உள்பட 5 போ் மீது வழக்கு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோயில் பூசாரி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:04 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோயில் பூசாரி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இனாம்குளத்தூா் அருகே உள்ள வடசேரி பிரிவு சாலையில் ராம கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் குறி சொல்லும் பூசாரியாக கேகே நகா் உடையான்பட்டி வசந்தன் நகரை சோ்ந்த அண்ணாமலை (எ) ஆரிப் (48) உள்ளாா். இவா், இக்கோயிலில், சமையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவரும் 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், கோயில் பூசாரி அண்ணாமலை மற்றும் அவருக்கு உதவியாக இருந்ததாக ரகுராமன், அசோக்குமாா், வெள்ளையம்மாள், சத்யா உள்ளிட்ட 5 போ் மீது இனாம்குளத்தூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments