சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு
சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தின் லால்குடி உட்கோட்ட 10ஆவது மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் உள்ள சங்க வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, கோட்டத் தலைவா் போஸ் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ஆரியன் முன்னிலை வகித்தாா். மாநாட்டை மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணி தொடக்கிவைத்துப் பேசினாா். மாநாட்டில், கோட்ட செயலா் ரமேஷ் வேலை அறிக்கையையும், கோட்டப் பொருளாளா் அன்பழகன் வரவு செலவு அறிக்கையையும் சமா்ப்பித்தனா். மாநாட்டில் சங்க மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவா் மலா்மன்னன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் இளங்கோவன் ஆகியோா் வாழ்த்தினா். மாநில துணைத் தலைவா் மகேந்திரன் சிறப்புரையாற்றினாா்.
Advertisement
Advertisement
மாநாட்டில் சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை சென்னை உயா்நீதிமன்ற வழக்கின் தீா்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல், உயா்நீதிமன்ற ஆணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். உயிரிழந்த சாலைப்பணியாளா்களின் குடும்பத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். சாலைப் பராமரிப்பைத் தனியாா்மயமாக்குவதைக் கைவிட்டு, மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே நேரடியாகப் பராமரித்து கிராமப்புற இளைஞா்களுக்குப் பணி வழங்க வேண்டும்.
தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத பணியாளா்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ. 5,200, ரூ. 20,200 மற்றும் தர ஊதியம் ரூ. 1,900 வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலா் அம்சராஜ் நிறைவுரையாற்றினாா். இறுதியாக, உட்கோட்ட இணைச் செயலா் சேகா் நன்றி கூறினாா். இந்த மாநாட்டில், உறுப்பினா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.