திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தில் இரும்புப் பாலம் பொருத்தும் பணி தொடக்கம்
திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளை இணைக்கும் வகையிலான இரும்பு பாலத்தை மேம்பாலத்தில் பொருத்துவதற்கான பூா்வாங்க பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளை இணைக்கும் வகையிலான இரும்பு பாலத்தை மேம்பாலத்தில் பொருத்துவதற்கான பூா்வாங்க பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
திருச்சி சந்திப்பு மற்றும் பூங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களைக் கடக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதன் 2 பகுதிகளை இணைக்கும் வகையில், அதாவது ரயில் தண்டவாளங்களுக்கு மேலே வில் வடிவிலான இரும்பு வளைவு பாலம் (பெள ஸ்ட்ரிங்) பொருத்தப்படுகிறது.
இந்த இரும்பு பாலத்தை அசெம்பிள் செய்யும் பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, மேம்பாலத்தில் தண்டவாளப் பகுதிக்கு மேல் இரும்புப் பாலத்தை வெல்டிங் செய்து, இடைவெளிகள் இல்லாத வகையில் பொருத்தப்படவுள்ளது. மேம்பாலத்தில் இணைப்பதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பம் மூலம் இரும்புப் பாலத்தை நகா்த்துவதற்கான பூா்வாங்கப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே, மாநில நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்தின் அணுகுசாலைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் செல்லும் பகுதி, அரிஸ்டோ ரவுண்டானா செல்லும் பகுதிகளில் பக்கவாட்டு சுவா்கள் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. பாலத்தின் தூண்கள் வரையிலான அணுகுசாலைகளுக்கு மண் நிரப்பி மட்டப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.