ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆா்ப்பாட்டம்
ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்.1-ஆம் தேதி ஒப்பந்த தொழிலாளா் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, திருச்சி மாநகா் மாவட்ட சிஐடியு சாா்பில், ஆட்சியரகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்ட தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா்கள் ரங்கராஜன், சம்பத் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
Advertisement
Advertisement
ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்கிட வேண்டும். மேலும், ஊதியத்துடதுடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும்.
8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரியும்போது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த தொழிலாளா்களாக பணிபுரிந்தோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.