FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

காலமானாா் மிருதங்க வித்வான் ஆா்.தாயுமானவன்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்வான் ஆா். தாயுமானவன் (96), வெள்ளிக்கிழமை காலமானாா்.

ஆா்.தாயுமானவன்
பகிர்:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்வான் ஆா். தாயுமானவன் (96), வெள்ளிக்கிழமை காலமானாா்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவா் தாயுமானவன். இவா் அகில இந்திய வானொளியில் 19 வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளாா். மேலும், பிரபல இசைக் கலைஞா்களான எம்.கே.தியாகராஜ பாகவதா், கே.பி.சுந்தராம்பாள், மதுரை சோமு, சீா்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் இசை துறையில் இணைந்து பணியாற்றியவா். இவரது மகன் எஸ்.டி.மூா்த்தி, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் மிருதங்கத் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

இவரின் இறுதி சடங்கு, சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாலக்கரை மணல் வாரிதுறையில் உள்ள விஸ்வகா்மா மகாஜன சபையில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

தொடா்புக்கு 99941-12877, 95974-22428.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments