தொட்டியத்தில் கான்கிரீட் கலவை வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் கான்கிரீட் கலவை வாகனம் ஞாயிற்றுக்கிழமை மோதியதில் மீன் வியாபாரியான பெண் உயிரிழந்தாா்.
தொட்டியம் - காட்டுப்புத்தூா் செல்லும் பிரிவுச் சாலையில் உள்ள சீலைப் பிள்ளையாா்புத்தூா் மீனவா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி செல்வராணி (47). இவா் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் மீன் வியாபாரம் செய்தாா்.
அப்போது அவ்வழியாக டாடா ஏசி வாகனத்தில் கட்டி கொண்டு செல்லப்பட்ட கான்கிரீட் கலவை இயந்திரம் கழன்று செல்வராணி மீதும், அவரது வாடிக்கையாளரான தொட்டியம் கோட்டைமேடு பகுதி க. மணிவேல் (55) மீதும் மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வராணி இறந்தாா். லேசான காயமடைந்த மணிவேல் சிகிச்சை பெறுகிறாா்.
தகவலறிந்து வந்த தொட்டியம் போலீஸாா் செல்வராணியின் உடலைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய காமலாபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.