மாடியில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
திருச்சி அருகே மதுபோதையில் மாடியில் இருந்து சனிக்கிழமை தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், பேராவூா் கத்தரிமுலையைச் சோ்ந்தவா் ராஜாராமன் மகன் ரஞ்சித்குமாா் (30). இவா் திருச்சியிலுள்ள தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளா்.
இவா் தனது நண்பா் ராஜதுரை என்பவருடன் திருச்சி மாவட்டம், ஓலையூா் பாலன் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இவா் சனிக்கிழமை மாடியின் சுவரில் அமா்ந்து மது அருந்தியபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ரஞ்சித்குமாரின் சகோதரா் ரஷித் அளித்த புகாரின்பேரில் மணிகண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.