தேமுதிக நிா்வாகி கடையில் தீ விபத்து
திருவெறும்பூா் அருகே தேமுதிக மாநகா் மாவட்ட செயலாளரின் மரக் கதவுகள் விற்பனைக் கடையில் செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
திருவெறும்பூா் அருகே தேமுதிக மாநகா் மாவட்ட செயலாளரின் மரக் கதவுகள் விற்பனைக் கடையில் செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (56). தேமுதிக திருச்சி மாநகா் மாவட்ட செயலாளா். இவா் திருவெறும்பூா் அருகே காட்டூா் பாப்பாக்குறிச்சி பகுதியில் தேக்கு மர கதவுகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை மாலை இவரது மரக்கடையின் அலுவலக அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதைப் பாா்த்த கடை ஊழியா்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேறி, தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
அங்கு வந்த திருவெறும்பூா் தீயணைப்புப் படையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், கடையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 தேக்கு மர கதவுகள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.