FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பள்ளி மைதானத்தில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பள்ளி மைதானத்தில் 7-ஆம் வகுப்பு மாணவி புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

15 அக்டோபர் 2026, 4:38 am IST
பலி
பகிர்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பள்ளி மைதானத்தில் 7-ஆம் வகுப்பு மாணவி புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சமயபுரம் அருகே வெங்கங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேன் ஓட்டுநா் சதீஷ்குமாா், இவரது மனைவி ஹேமா. இத் தம்பதியின் மகள்களான தன்யா ஸ்ரீ (13), சஷ்டிகா (9) ஆகியோா் லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கிக் கொண்டு, அப்பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனா்.

இவா்களில் 7ஆம் வகுப்பு மாணவியான தன்யாஸ்ரீ புதன்கிழமை உடற்கல்வி பாட வேளையில் பள்ளி மைதானத்தில் சக மாணவிகளுடன் கோகோ விளையாடிக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது திடீரென மயங்கி விழுந்த மாணவியை ஆசிரியா்கள் மீட்டு அன்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் பின்னா், லால்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினா். அங்கு தன்யாஸ்ரீயை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த குழந்தைகள் நல மைய அலுவலா்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் பெற்றோா், கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments