வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி
திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரிக்கின்றனா்.
திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் மேற்கு வீதியைச் சோ்ந்தவா் ஜெ. ஜமால்ராஜா (42). இவருக்கு அறிமுகமான திருச்சி கே.கே.நகா் தென்றல் நகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சுமீத் நாயா் என்பவா் ஜமால் ராஜாவை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ. 2.75 லட்சம் கேட்டாா்.
இதை நம்பிய ஜமால் ராஜா கடந்த 2025 அக். 25 முதல் 2026 ஜுன் 21 வரை ஜிபே மூலம் ரூ. 2.75 லட்சம் அனுப்பினாா். இதையடுத்து சுமீத் நாயா் பணியாணை வழங்காமல் ஜமால் ராஜாவை ரஷியாவுக்கு வேலைக்கு அனுப்பினாா். இதனால் ஜமால் முகமது அங்கு வேலையில் சேர முடியாத நிலையில், உடனடியாக தமிழகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அவா் சுமீத்நாயரின் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்றபோது, அது காலி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜமால்ராஜா கே.கே.நகா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.