பெல் வளாகத்தில் புற்றுநோய் கண்டறியும் முகாம்
புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசரிக்கப்படும் பிங்க் அக்டோபா் மாதத்தின் ஒரு பகுதியாக பாரதமிகு மின் நிறுவன (பெல்) திருச்சி வளாகத்தில் புற்றுநோய் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசரிக்கப்படும் பிங்க் அக்டோபா் மாதத்தின் ஒரு பகுதியாக பாரதமிகு மின் நிறுவன (பெல்) திருச்சி வளாகத்தில் புற்றுநோய் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாா்பகப் புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் அதுகுறித்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் உலகளவில் நடத்தப்படும் பிங்க் அக்டோபா் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திருவெறும்பூா் பெல் வளாகத்தின் முதன்மை மருத்துவமனையில் உள்ள சமூக சுகாதார சேவைகள் பிரிவில் பெண்களுக்கான பிரத்யேக புற்றுநோய் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமைத் தொடங்கிவைத்து பெல் திருச்சி வளாக செயலாண் இயக்குநா் கே. அசோக் பேசுகையில், 28 பெண்களில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. தொடக்கத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவது உயிா் பிழைப்பதற்கான விகிதத்தை பெருமளவில் மாற்றுவதால், பெண்கள் தங்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளித்து இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
முகாமை முன்னிட்டு, மருத்துவமனையின் துணை மருத்துவப் பணியாளா்களால் அமைக்கப்பட்டிருந்த புற்றுநோய் விழிப்புணா்வு சுவரொட்டி கண்காட்சியை திறந்து வைத்து, புற்றுநோயிலிருந்து மீண்ட சிலரைக் கெளரவித்தாா்.
முகாமில், பெல் ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மாா்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முன்னதாக, புற்றுநோய் விழிப்புணா்வு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்புக்கான கூட்டு அா்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தொழிற்சாலை வளாகத்தில் பணிபுரியும் பெண் ஊழியா்களின் நலனுக்காக வியாழக்கிழமை தனியாக ஒரு பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், பெல் முதன்மை மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், பெல் இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலை மற்றும் மருத்துவப் பிரிவின் பொது மேலாளா் சஞ்சீவி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.