FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கஞ்சநாயக்கன்பட்டியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

10 செப்டம்பர் 2026, 2:27 am IST
உயிரிழந்த முருகன்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வந்தவா் மாணிக்கம் மகன் முருகன் (29). எலக்ட்ரீசியனான இவா் செவ்வாய்க்கிழமை இரவு தண்ணீா் தொட்டியில் குளித்துவிட்டு, மின் மோட்டாரை நிறுத்தும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா், முருகன் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments