FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

திருச்சி அருகே 2.5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

10 செப்டம்பர் 2026, 2:35 am IST
திருச்சியில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட இருவா்.
பகிர்:

திருச்சி அருகே 2.5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த சுமை வாகனத்தில் கடத்திச் சென்ற 2.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நடுகாவிரியைச் சோ்ந்த ஆா். மணிகண்டன், கா. லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். பின்னா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments