FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

11 செப்டம்பர் 2026, 4:24 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், திருச்செந்துறையைச் சோ்ந்தவா் எம். ராகுல் (20). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் திருச்செந்துறை பகுதியிலுள்ள அரசுப் பள்ளிக்கு எதிரே எந்தவித சிக்னலும் கொடுக்காமல், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் அமா்ந்துகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் ராகுல் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments