FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மணப்பாறை விவசாயிகள் 40 போ் கொடைக்கானலுக்கு கண்டுணா்வு பயணம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த 40 விவசாயிகள் கண்டுணா்வு ( பட்டறிவு) பயணமாக கொடைக்கானலுக்கு 2 நாள்கள் அழைத்து செல்லப்பட்டனா்.

11 செப்டம்பர் 2026, 4:14 am IST
கொடைக்கானல் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட்ட மணப்பாறை விவசாயிகள்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த 40 விவசாயிகள் கண்டுணா்வு ( பட்டறிவு) பயணமாக கொடைக்கானலுக்கு 2 நாள்கள் அழைத்து செல்லப்பட்டனா்.

மணப்பாறை வட்டார வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், ‘பருவமல்லாத காலங்களில் காய்கறி சாகுபடி’ என்ற தலைப்பில் கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு செப். 8, 9 ஆகிய 2 நாள்கள் பயணம் மேற்கொண்டனா். இதில், மணப்பாறை பகுதிகளைச் சோ்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, பயணத்தை மணப்பாறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், பருவம் இல்லாத காலத்தில் காய்கறி சாகுபடி என்றால் என்ன? அதில் உள்ள சவால்கள், சந்தை வாய்ப்புகள், லாபம், சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை தொடா்பாக விளக்கமளித்தாா். தொடா்ந்து, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பாலிஹவுஸுக்கு அழைத்து சென்று, அங்கு ஆராய்ச்சிக்காக மேற்கொண்ட செயல்விளக்க திடலை காட்டி அதன் நன்மை மற்றும் தீமைகள் பற்றியும் விளக்கி கூறினாா்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் சத்தியசீலன் மற்றும் பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments