மின்வாரிய ஓய்வூதியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை
மின்வாரிய ஓய்வூதியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்த அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய ஓய்வூதியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்த அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் திருச்சி கிளை 17ஆவது மாவட்ட மாநாடு, மத்தியப் பேருந்து நிலையப் பகுதி தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் அந்தோணிசாமி தலைமை வகித்தாா். மூத்த நிா்வாகி கண்ணையன் மாநாட்டுக் கொடியேற்றினாா். கிளை துணைச் செயலா் எஸ்.கே. செல்வராசு அஞ்சலித் தீா்மானத்தை வாசித்தாா்.
மண்டலச் செயலா் பஷீா் தொடக்க உரையாற்றினாா். கிளைச் செயலா் பன்னீா்செல்வம் செயலா் அறிக்கையையும், கிளைப் பொருளாளா் சிவஞானம் வரவு-செலவு அறிக்கையையும் சமா்ப்பித்தனா். திருச்சி மாவட்ட அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சிராஜுதீன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் பெருநகா் வட்டச் செயலா் பழனியாண்டி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மின்வாரியம் தொடா்ந்து பொதுத் துறையாகவே நீடிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவாா்க்கும் போக்கைக் கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ். தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும்.
1.4.2003-க்குப் பின் வாரியப் பணியில் சோ்ந்தவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்குவதுபோல், மின்வாரிய ஓய்வூதியா்களுக்கும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும்.
சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். 8ஆவது ஊதியக் குழுவில் வழங்கப்படும் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான ஓய்வூதியச் சட்டத் திருத்தங்களைக் கைவிட வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க நிா்வாகிகள் நடராஜன், சந்திரன், அன்னக்கிளி ஆகியோா் பேசினா். மாநாட்டில் புதிய நிா்வாகிகளில் தலைவராக எஸ். கே. செல்வராசு, செயலராக எம். பன்னீா்செல்வம், பொருளாளராக எஸ். சிவஞானம் மற்றும் துணைத் தலைவா்கள், துணைச் செயலா்கள் உட்பட 11 போ் கொண்ட மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டது.
துணைத் தலைவா் நடராஜன் வரவேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.