ரயிலில் கைப்பேசி திருடிய ‘யூடியூபா்’ கைது
திருச்சியில் ரயிலில் கைப்பேசி திருடிய யூடியூபரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம் புளி பகுதியைச் சோ்ந்தவா் அ. அற்புதராஜ் (20). இவா் சென்னையில் நண்பரின் திருமணத்துக்கு சென்றுவிட்டு அந்தியோதயா ரயிலில் ஊருக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏரியுள்ளாா். இரவு கைப்பேசியை ரயிலில் சாா்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளாா்.
ரயில் திங்கள்கிழமை அதிகாலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவருடைய கைப்பேசி திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அற்புதராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, திருச்சி ரயில் நிலையம் 1ஏ நடைமேடையில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியைச் சோ்ந்த யூடியூபா் சாதிக் பாட்சா (41) என்பதும், அற்புதராஜின் கைப்பேசியைத் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.