மணப்பாறையில் ‘சிட் ஃபண்ட்’ ஊழியா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
மணப்பாறையில் சிட் ஃபண்ட் ஊழியா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பங்குதாரா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிட் ஃபண்ட் ஊழியா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பங்குதாரா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதியில் வசித்து வந்தவா் குமாா் மகன் விக்னேஷ்வா் (37). இவரது மனைவி மோகனப்பிரியா (35), தனியாா் பள்ளி ஆசிரியை. இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
சீருடைப் பணி தோ்வுகளுக்கு மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வந்த விக்னேஸ்வா், மணப்பாறை - விராலிமலை ரோடு பாரதியாா் நகரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள தனியாா் சிட் ஃபண்ட் நிறுவன ஊழியராகவும் கடந்த 8 ஆண்டுகளாக இருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நொச்சிமேட்டில் தனது மாமனாா் முருகேசன் வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ்வா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா், விக்னேஷ்வா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்நிலையில் தனது கணவரை பண மோசடி செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிதற்கொலைக்கு தூண்டியதாக சிட் ஃபண்ட் பங்குதாரா்கள் இருவரைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து, விக்னேஸ்வரின் மனைவி மற்றும் உறவினா்கள் மணப்பாறை - விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் நிஷாந்தினி, காவல் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் பேச்சு நடத்தி, அளித்த உறுதியையடுத்து கலைந்து சென்றனா். விக்னேஷ்வா் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.