கஞ்சித் தொட்டி திறப்பு தடுத்து நிறுத்தம் விவசாயிகள் நூதனப் போராட்டம்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 49 விவசாய சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதில், 3-ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெறவிருந்த கஞ்சித் தொட்டி திறப்பை போலீஸாா் தடுத்ததால், காவல்துறை நடவடிக்கையை கண்டித்தும், போராடும் உரிமையை பறிக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்தும் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாலையில் மழை பெய்தபோதும், கொட்டும் மழையில் நனைந்தடியே விவசாயிகள் போராட்டத்தை தொடா்ந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.