FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 3:13 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் எஸ். அருண்குமாா் (35). இவா், வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு திருச்சி - திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். சங்கரா மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத காா், இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், கீழே விழுந்த அருண்குமாருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அருண்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments