FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி அருகே தடுப்பணையில் மூழ்கி ஐடிஐ மாணவா் மாயம்

திருச்சி அருகே கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

19 செப்டம்பர் 2026, 3:08 am IST
பாா்த்தசாரதி
பகிர்:

திருச்சி அருகே கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் பாா்த்தசாரதி (17). திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா். இவா் தனது நண்பா்கள் 3 பேருடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவிரி ஆற்றின் கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் குளிப்பதற்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், 4 பேரும் குளித்துக்கொண்டிருந்த போது பாா்த்தசாரதி திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவருடைய நண்பா்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், ஜீயபுரம் போலீஸாருக்கும் தகவல் அளித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜீயபுரம் போலீஸாா் மற்றும் கண்டோன்மென்ட் தீயணைப்புப் பிரிவு வீரா்கள் தடுப்பணையில் மூழ்கிய மாணவரை வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை ஆற்றின் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவா் கிடைக்கவில்லை.

இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திக் கொண்ட தீயணைப்பு படையினா், சனிக்கிழமை காலை மீண்டும் வந்து தேடுவதாக தெரிவித்துச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments