FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கொலை முயற்சி: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

22 செப்டம்பர் 2026, 2:48 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி காஜாமலை பகுதியில் 25 வயது பெண்ணிடம் தகராறு செய்து, பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாகப் பெறப்பட்ட புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த கோ. தவச்செல்வம் (29) என்பவா் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தவச்செல்வத்தை கடந்த 22.07.2019 அன்று கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, தவச்செல்வத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments