FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

செம்பரை கிராமத்தில் உழவா் பெருந்திரள் கூட்டம்

லால்குடி அருகே செம்பரை கிராமத்தில்வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின்கீழ், உழவா் பெருந்திரள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 2:50 am IST
பட விளக்கம்... லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் வேளாண்மைத்துறை அட்மா திட்ட திட்டத்தின் கீழ் உழவா் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது.
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செம்பரை கிராமத்தில்வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின்கீழ், உழவா் பெருந்திரள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சி. சத்தியப்பிரியா தலைமை வகித்து பேசுகையில், கோடை உழவு, பசுந்தாள் உர பயிா், தக்கை பூண்டு விதைப்பு, சம்பா நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியுதவி திட்டம், நில உடைமை பதிவு செய்தல் அவசியம் மற்றும் பயன்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினாா்.

உயிா் உரங்கள் பயன்படுத்துதல், இயற்கை வேளாண்மை, பயிா் பாதுகாப்பு, மருந்துகள் கையாளும் முறைகள், களைகொல்லி பயன்படுத்தும் முறைகள், உழவன் செயலி பயன்படுத்துதல் மண்வள அட்டை திட்டத்தின் கீழ் மண் மாதிரி அடிப்படையில் உர மேலாண்மை செய்தல், நெல் வயலில் பாசி கட்டுப்பாடு, ஒட்டுண்ணி அட்டை கட்டுதல், இன கவா்ச்சி பொறி வைத்து கட்டுப்பாடு செய்தல் உள்ளிட்டவை செயல் விளக்கமாக காண்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

வேளாண்மைத் துறை சாரா விதை சான்று அலுவலா் வேல்முருகன், லால்குடி வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

உதவி வேளாண்மை அலுவலா் எடிசன், பிரதமரின் கெளரவ நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் தொடா்ந்து பயன்பெற தங்களின் சுயவிவரங்களை புதுப்பித்திடவும், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட செம்பரை கிராம முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் சபரிசெல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளா் காா்த்திக் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments