இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும்: அமைச்சர் சீ. ரமேஷ்
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்றாா் இந்து சமய அறிநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்றாா் இந்து சமய அறிநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.
இதுதொடா்பாக திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
ஜெம் வீரமணி விவகாரத்தில் குற்றம் செய்தவா்கள் யாராக இருந்தாலும், எந்த அதிகாரியாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் இடைத்தோ்தல் பிரசாரம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இடைத்தோ்தலில் பொதுமக்கள் சிறந்த வரவேற்பை அளித்து வருகின்றனா்.
இந்த 2 தொகுதி இடைத்தோ்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பெறும் என்றாா் அமைச்சா் ரமேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.